கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே இடையூறான பேரிகார்டை அகற்ற வேண்டும்

கரூர்: கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி சாலையும், வடக்கு பிரதட்சணம் சாலையும் இடத்தில், சாக்கடை வடிகால் பழுது நீக்குவதற்காக பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக இந்த பேரிகார்டு உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.

வடக்கு பிரதட்சணம் சாலையில் இருந்து ஆஸ்பத்திரி சாலைக்கும், இந்த சாலையில் இருந்து வடக்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், இந்த சந்திப்பு பகுதியில் இந்த பேரிகார்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பேரிகார்டை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: