×

காந்தி மியூசியத்தில் கருத்தரங்கம்

மதுரை, பிப்.26: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி இணைந்து ”அறச் சிந்தனையாளர் மகாத்மா காந்தி” தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தியது. கல்வியியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார். மியூசிய பொருளாளர் வக்கீல் செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சுந்தர், காந்திப் பொட்டல் சிலை கமிட்டி தலைவர் சாமிக்காளை வாழ்த்துரை வழங்கினர்.

காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் அறிமுக உரை ஆற்றினார். எழுத்தாளர் அழகர்சாமி, முழுமை நல இயக்குநர் வெங்கடேஸ்வரன், ஆசிரியர்கள் ஜெயக்குமாரன், சரவணன், சமூக ஆர்வலர் சுவாமிநாதன், அம்பிகா மெட்ரிக் பள்ளி முதல்வர் சியாமளா ஆகியோர் காந்தியின் அறம் சார்ந்த சிந்தனைகளான அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, சர்வோதயம், அகிம்சை ஆகியவை குறித்து பேசினர்.

காந்தியத்தின் இன்றைய தேவை குறித்து மாணவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றன. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு கஸ்தூரிபா திலகம் என்னும் நூலினை காந்தியவாதி சந்திரன் வழங்கினார். இக்கருத்தரங்கில் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மாரிச்செல்வம், ரவி, தேவ ஆசீர்வாதம், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஜாஸ்பர் ராபின்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், வெள்ளைசாமி நாடார் கல்லூரி செயலாளர் சுந்தர் செய்திருந்தனர்.

Tags : Gandhi Museum ,
× RELATED மதுரை காந்தி மியூசியத்தில்...