×

சித்த வைத்திய சங்கக் கூட்டம்

மதுரை, பிப்.26: மதுரை சித்த வைத்திய சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. சங்க தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். செயல் தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். அகில இந்திய சித்த வைத்திய சங்க மண்டல செயலாளர் குருநாதன், செயலாளர் கருணாமூர்த்தி, துணை தலைவர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் ரவி, தமிழ்மாநில சித்த வைத்திய சங்க செயலாளர் பாக்கம் தமிழன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. சங்க ஆண்டு விழா மற்றும் கோரிக்கை மாநாடு நடத்துதல், பாரம்பரிய வைத்தியர்களுக்கு அரசு அங்கீகாரம் கோருதல் மற்றும் நிர்வாகக்குழு தேர்வு செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Chitta Vaidya Sangam ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...