×

விவசாயிகள் மகிழ்ச்சி திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சி சார்பில் ரூ.36லட்சத்தில் பொதுகழிப்பறை கட்டும் பணி


திருவாரூர், பிப். 26: திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சி மூலம் ரூ 36 லட்சம் மதிப்பில் பொது கழிப்பறை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வரும் நிலையில் பிடாரி கோவில் தெருவில் இருந்து வரும் குளம், வாசன் நகர் மற்றும் ஐ.பி கோயில் குளங்களும் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடை பாதைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் மின்விளக்கு வசதியுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள நகராட்சியின் சோமசுந்தரம் பூங்காவானது இந்த கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெற்கு வீதியில் ரூ ஒரு கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் ஒன்று அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ. ஒரு கோடியே 25 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த பழைய பேருந்து நிலையம் அருகே பனகல் சாலையில் து£ய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பொது கழிப்பறை ஒன்றும் கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருவதற்கு தமிழக அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார்75% முதல் 80 சதவீதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் முடிவு பெற்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலையை எட்டும் எனஎதிர் பார்க்கப்படுகிறது. தற்போது சரசரியாக ஏக்கருக்கு 30 மூட்டைக்கு குறையாமல் மகசூல் கிடைத்து வருவதாக விவசாயிகள் கூறிவருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.

Tags : Panagal road ,Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...