×

மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு பந்தல் அமைக்கும் பணி சிறுவாச்சூரில் மாநில ஆலோசனை கூட்டம் படிப்பு, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்


பெரம்பலூர்,பிப்.26:படிப்புக்கேற்ற தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தி த்தர வேண்டும் என பெரம்பலூர் அருகே நடந்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப் பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அய் யலூர் சாலையில் உள்ள பழைய நரிக்குறவர் மாண வர் விடுதியில், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று(25ம்தேதி) நடைபெற்றது. தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் நம்பியார் வரவேற்றார். தென்னிந்திய ஆதி வாசிகள் நல சங்கத்தின் தலைவர் சென்னை ஞானசுந்தரி முன்னிலை வகித் தார். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் காரை சுப்ரமணியன் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ஜீவா,திருச்சி ரவிச்சந்தி ரன், முருகன், டோல்கேட் தங்கமணி, புதுக்கோட்டை அறந்தாங்கி முத்துவேல், முத்துசாமி, அரியலூர் ஜெயராணி, தஞ்சை உளியூர் செந்தில், திருவாரூர் வீரமணி, எறையூர் சேகர், சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட னர். இதில் மத்திய அரசால் நரிக் குறவர் என்கிற குருவிக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணை த்து மத்திய அரசிதழில் வெளியிட்டதை தமிழக அரசு ஊர்ஜிதம் செய்து, தமிழகத்தில் 36 வகை பழ ங்குடியினர் பட்டியலில் திருத்தம்செய்து, 37வது இனமாக நரிக்குறவர்களை பழங்குடியினர் அட்டவ ணையில் சேர்த்து விரைவில் நரிக்குறவர்களுக்கு எஸ்டி சாதிச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடு க்க வேண்டும்.

மாவட்ட வாரியாக படித்த பழங்குடியின நரிக்குறவர்களுக்கு தனி கூட்டம் ஏற்பாடு செய் து படிப்புக்கேற்ற தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பி னை ஏற்படுத்தித்தர வேண் டும். மாவட்டம் தோறும் நிரந்தர உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க வேண்டும். அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு நிரந்தர உண்டு உறைவிட பள்ளியாவது அமைத்திட வேண்டும். அது பத்தாம் வகுப்பு வரை உண்டு உறைவிட பள்ளி யாக இருக்க வேண்டும். தொழில் தொடங்க மணி மாலை சொசைட்டி அமை க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு அதிகபட்ச மானிய தொகையாக தனி நபருக்கு ரூ.2 லட்சம் மானிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொருளாதார ரீதியாக மத் திய மாநில அரசுகள் தொ ழில் தொடங்குவதற்கு அறி விக்கின்ற திட்டங்கள் அனைத்தும் அரசு அதிகாரி கள் மூலம் நரிக்குறவர்கள் மக்களுக்கு தெரியும்படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரிக்குறவர் மா ணவர்கள் மிகவும் பிற்படு த்தப்பட்டோர் (எம்பிசி) பட்டி யலில் இருக்கும்போது படி ப்புக்காக வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படும் மாணவர்களின் கடமை ரத்து செய்ய வேண்டும். நரிக்குறவர் சமூக மக்க ளின் தொழில் வளர்ச்சி மே ம்பாடு அடைய நரிக்குறவர் களுக்கான மக்கள் தொ கை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடி நரிக் குறவர் குடியிருக்கும் பகுதி களில் நரிக்குறவர் போட் டியிடும் வகையில் பழங்கு டியினருக்கு தனி இடஒதுக் கீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமி ழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு துணை ஒருங்கி ணைப்பாளர் திருப்பத்தூர் பொன்னையன் நன்றி கூறினார்.

Tags : Siruvachur ,
× RELATED சிறுவாச்சூர் மதுர காளியம்மன் ேகாயிலில் பக்தர்களுக்கு மோர்