நரிக்குறவர் கூட்டமைப்பு தீர்மானம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பேரணி

ஜெயங்கொண்டம், பிப்.26: ஜெயங்கொண்டத்தில் தனியார் மண்டபத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியோர் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் ராசமூர்த்தி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட புகையிலை கட்டுமாடு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரியா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் போதை ஒழிப்பு தொடர்பாகவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கருத்துக்கள் வழங்கி பேசினர். முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் தனியார் மண்டபத்தை சென்றடைந்தது. விழாவில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் தமிழ் துறை தலைவருமான கோடித்துரை நன்றி கூறினார்.அஞ்ச தேவையில்லை முகாமில் நீதிபதி பல்கிஸ் பேசும்போது, உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற் பட்டால் நீங்கள் நீதிமன்றத் தைத் தான் நாடவேண்டும் என்பது அவசியம் இல்லை. இதற்காகவே நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு உங்க ளது பிரச்சனைகளை தெரி வித்தால் உங்களுக்காக கட்டணம் இன்றி வாதாட வழக்கறிஞர்களை நியமிப் பார்கள். கட்டணம் இல்லா மல் வழக்கறிஞர்கள் வாதா டினால் நியாயம் கிடைக்கு மா என அஞ்சத் தேவையி ல்லை. அவர்களுக்குரிய கட்டணத்தை நீதிமன்றம் அவர்களுக்கு வழங்குகி றது எனத் தெரிவித்தார்.

Related Stories: