திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் தொடரும் வழிப்பறி

திருப்பூர்,பிப்.26: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால், பயணிகள் பீதியடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை,பொள்ளாச்சி,ஈரோடு,சேலம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் செல்கின்றன.

அன்றாடம் பல்வேறு பணிகள் நிமித்தமாக ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் வந்து செல்கின்றனர். கண்காணிப்பு பணிக்காக, ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளிடம், பிக்பாக்கெட், மொபைல் போனை பறித்து செல்வது மற்றும் பஸ் ஸ்டாண்டையொட்டி உள்ள வீதிகள் வழியாக நடந்து வரும் மக்களிடம் பணம், மொபைல் போன்களை வழிப்பறி செய்வது போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. குடிமகன்கள் மதுஅருந்தி விட்டு, பயணிகள் இருக்கைகளில் துாங்குகின்றனர். இதனால் அன்றாடம் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், பீதியிடன் நிற்க வேண்டிய நிலையுள்ளது. ஆகவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: