×

ஒன்றிய அரசின் அதிகாரிகள் பாராட்டு பொள்ளாச்சி மெடி டைரி புத்தக வெளியீட்டு விழா

பொள்ளாச்சி, பிப்.26: பொள்ளாச்சி அரிமா சங்கம் சார்பில் தொகுக்கப்பட்ட மருத்துவ தகவல்கள் அடங்கிய பொள்ளாச்சி மெடி டைரி புத்தக வெளியீட்டு விழா பொள்ளாச்சி அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகரம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் அனைத்து விதமான மருத்துவர்கள், மருத்துவமனைகள், லேப்கள், மருந்தகங்கள், தனியார் நர்சிங், சேவை ரத்த வங்கிகள், ஆம்புலன்ஸ் சேவை போன்ற மருத்துவம் தொடர்பான அனைத்து சேவை மையங்களின் தகவல்கள் தொடர்பு எண்கள் அடங்கிய மருத்துவ தகவல் களஞ்சிய புத்தகமான பொள்ளாச்சி மெடிடைரியை இந்திய மருத்துவ தகவல் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் மருத்துவர் பழனிச்சாமி வெளியிட அரிமா சங்க ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, இந்திய பல் மருத்துவக் கழகத்தின் செயலாளர் மருத்துவர் ராஜ்மோகன், பொள்ளாச்சி அரிமா சங்க தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி அரிமா சங்க முன்னாள் தலைவர் நாகமாணிக்கம் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, நெகமம், வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் சுமார் 240 மருந்தகங்களின் மூலமாக பொதுமக்களுக்கு இப்புத்தகம் மலிவு விலையில் விற்பனை செய்யபட உள்ளது. மருத்துவத்துறையில் உள்ள பரவலான வாய்ப்புகளையும், வசதிகளையும், கடைக்கோடி மக்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்களும் அரிமா சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Union Government Appreciation Pollachi Medi Diary ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்