தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: ஈரோட்டில் 5,989 மாணவ-மாணவிகள் எழுதினர்

ஈரோடு, பிப். 26: ஈரோடு மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வினை 5,989 மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு(என்.எம்.எம்.எஸ்) 26 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை 6,124 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 5,989 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதினர். 135 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை பிளஸ் 2 படிக்கும் வரை அரசால் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: