ரயில் பயணியிடம் அநாகரிகம்: பாஜ துணை தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ரயில் பயணத்தின்போது, சக பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாஜ மாநில துணை தலைவரை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பெரம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன். இவர், ரயில் பயணத்தின்போது சக பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதை கண்டித்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டம் சார்பில், பாஜ துணை தலைவர் திருப்பதி நாராயணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், இதை கண்டிக்கின்ற வகையில் திருப்பதி நாராயணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வடசென்னை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: