கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை,  பிப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிய கருத்துகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும்  ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில குழு உறுப்பினர் பத்ரி, ஆனந்தன்,  மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, ஆறுமுகம்,  பூவராகவன், சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மோகன், ஜெயகுமார், ரகுராமன்,  நகர செயலாளர் சேகர் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: