திருவண்ணாமலை அத்தியந்தல் கிராமத்தில் துறையூர் பகுதி விவசாயிகளுக்கு சிறுதானியத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

துறையூர்: துறையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சிறுதானியத்தில் மதிப்புகூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியந்தல் கிராமத்தில் அளிக்கப்பட்டது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநிலத்திற்குள் விவசாயிகள் பயிற்சி இனத்தின்கீழ் சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் நடைபெற்ற பயிற்சியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர் சிறுதானிய மகத்துவம் மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் வைத்திலிங்கம் வரவேற்று பேசுகையில், அத்தியந்தல் மையம் குறித்து அங்கிருந்த வெளியிடப்பட்ட திணை அத்தியந்தல் 1, சாமை அத்தியந்தல் 1, பனிவரகு அத்தியந்தல் 1, குதிரை வாலி அத்திந்தல் 1, வரகு அத்தியந்தல் 1, கேழ்வரகு அத்தியந்தல் 1 ஆகிய ரகங்களின் குணாதிசயங்கள், பருவம், வயது, மகசூல் பற்றி விளக்கி கூறினார் உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சத்யா, தானிய சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்களை பற்றியும், நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சரவணன் சிறுதானிய சாகுபடியில் எதிர்கொள்ளும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும் பயிர் இனப்பெருக்கவியல் மற்றும் மரபியல் துறை பேராசிரியர் முனைவர் சுமதி மணி சிறுதானியங்கள் விதை உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளித்தனர்

முதுநிலை ஆராய்ச்சி மாணவி முனைவர் மணிமொழி செல்வி, பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளை வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று அத்தியந்தல் மகத்துவம் மையத்தில் சாகுபடி செய்யப்பட்ட குதிரைவாலி, பனி வரகு, கேழ்வரகு, திணை ஆகியவற்றைப் பற்றி கூறி ரகங்களின் சிறப்பு இயல்புகளை விளக்கினார் மாவட்ட கலெக்டரின் சிறந்த சிறு தானிய விவசாயி சான்று பெற்ற திருவண்ணாமலை கலசப்பாக்கம் கார்த்திகேயன், சிறுதானியங்களில் எளிமையாக மேற்கொள்ள வேண்டிய மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்களான லட்டு, முறுக்கு, அதிரசம், சத்துமாவு, தோசை, அடை, பொங்கல், தயிர் சாதம், பிரியாணி பற்றி பயிற்சி அளித்ததுடன் மதிப்புக்கூட்டுகள், இயந்திரங்களில் கையாள்வதில் உள்ள இடர்பாடுகள், இயந்திரங்களின் விலை ஆகியவற்றைப் பற்றி பயிற்சி அளித்தார் மையத்திலுள்ள சிறு தானியங்கள் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறு தானியங்களில் கல், மண், தூசிகளை பிரித்தெடுக்கும் இயந்திரம், உமி நீக்கம் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், சத்துமாவு உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் காண்பித்து தொழில்நுட்ப உதவியாளர் கஸ்தூரி பயிற்சி அளித்தார்

மொத்தம் 3 நாட்கள் நடந்த பயிற்சிக்கான அறிவரைகள் மற்றும் ஆலோசனைகளை திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் மோகன் மற்றும் வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி வழங்கினார்கள் துறையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரவி வேளாண்மை அலுவலர் கமல் தலைமை வகித்து அனுப்பி வைத்தனர் பயிற்சிக்கான விவசாயிகளை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தினேஷ், சதீஷ் குமார், மனோகரன், ராஜவேல், சந்தோஷ் குமார், ரமேஷ் ஆகியோர் அனுப்பி வைத்தனர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்து விவசாயிகளை அத்தியந்தல் அழைத்துச் சென்று மீண்டும் துறையூர் திரும்பினார் இந்த பயிற்சியில் துறையூர் பகுதியைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்

Related Stories: