×

வாகன ஓட்டிகள் கோரிக்கை நெடும்பலம் அரசு விதை பண்ணையில் இருந்து முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான வேகத்தடையால் விபத்து அபாயம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சமீபத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒரு வேகதடை அமைக்கப்பட்டது. முதலில் இந்த வேகதடை இருப்பதற்கு போதிய அறிவிப்பு பலகை வைக்காததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. அதன்பின்னர் வேகத்தடை இருபுறமும் வேகதடை இருப்பதற்கான விளம்பர பலகை வைக்கப்பட்டது ஆனாலும் விபத்துக்கள் தொடர்ந்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக சமீபத்தில் இந்த வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெவ்வேறு விபத்துகளில் இருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். அதேபோல் சிறு விபத்துகள் முதல் பெரிய விபத்துக்கள் தினமும் விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவில் அதிகளவில் உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை சாலையானது ஒருபுறம் பாண்டிச்சேரி வரையிலும் மறுபுறம் தூத்துக்குடி வரையிலும் சென்று முடிகிறது. அதனால் இவ்வழியாகதான் தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள், அதேபோல் சுற்றுபகுதியை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த வேகத்தடை அருகே தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் பெரியளவில் விபத்துகள் நடைபெறுவதற்கு முன்பு இந்த ஆபத்தான வேகதடைக்கு வௌ்ளை பெயிண்ட் அடித்தும் வேகத்தடை இருபுறமும் சுமார் 10அடி தூரம் வரை பெயிண்டால் வௌ்ளை கோடுகள் அமைத்தும் அதேபோல் இருபுறமும் சிக்னல் விளக்குகள் அமைத்து தர வேண்டும் அப்படியில்லையேல் வேகத்தடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி,பிப்.25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதை பண்ணைகளில் 55 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டு முதல் கட்டமாக நெடும்பலம் அரசு விதைபண்ணையில் கடந்த ஆண்டு 5 ஏக்கரில் இயந்திரமூலம் மாப்பிள்ளை நேரடி விதைப்பும் தூய மல்லி 10 ஏக்கரில் இயந்திர நடவு பணியும் 45 ஏக்கரில் மற்ற ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. தற்போது இயந்திரம் மூலம் வைக்கோல் கட்டு கட்டப்பட்டு கொருக்கை அரசு கால்நடை பண்ணைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tags : Government Seed Farm ,Muthuppet ,Udayamarthandapuram East Coast Road ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா