×

சேலம் போலீஸ் கமிஷனர் மாற்றம் ஏன்?

சேலம், பிப். 25: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோதா மாற்றப்பட்டது ஏன்? என்ற புது தகவல்கள் கிடைத்துள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தவர் நஜ்மல் ஹோதா. இவர் நேற்றுமுன்தினம் ஆவடிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வரும் விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் ஓரிரு நாட்களில் பதவிஏற்பார் என கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நஜ்மல் ஹோதா பொறுப்பேற்றார். இவர் மாநகரில் அதிகப்படியான எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் அக்கரை எடுத்துக் கொண்டார்.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொதுமக்களின் பங்களிப்புடன் பொருத்தப்பட்டது. அதேபோல் மக்களோடு மக்களாக போலீசாரும் பழக வேண்டும் என்பதற்காக மாலை ஒரு மணி நேரம் நடை ரோந்து பயணத்தை கொண்டு வந்தார். அந்தந்த போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் தெரு தெருவாக சென்று பொதுமக்களுடன் பழகுவர். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் குடும்பம் சென்னையில் வசிப்பதால் சென்னைக்கு மாறுதலாகி செல்வதற்கு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி அவர் சென்னைக்கே மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பிறகு தான் கமிஷனர் மாற்றப்பட்டார். வேலூரில் முதல்வர்ஆய்வு முடித்து சென்ற பிறகு தான் ராணிப்பேட்டை எஸ்.பி. மாற்றப்பட்டார். அதுபோலத்தான் மாநகர போலீஸ் கமிஷனரின் மாற்றமும் நடந்துள்ளது எனவும் போலீசார் கூறிவருகின்றனர்.

4 உண்டியல் மூலம்
₹8.37 லட்சம் வசூல்சேலம், பிப்.25: சேலம் டவுன் ராஜகணபதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள 4 உண்டியல்கள் மூலம் ₹8.37 லட்சம் காணிக்கை வசூலானது.
சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், தேர்வீதியில் புகழ்பெற்ற ராஜகணபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது.

சுகவனேஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இப்பணியில், பெண் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில், உண்டியல்கள் மூலம் ₹8 லட்சத்து 37 ஆயிரத்து 440 வசூலானது. மேலும், 2 கிராம் தங்கம் மற்றும் 97.8 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இதேபோல், மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதில், ₹34 ஆயிரத்து 640 காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது.

கொளத்தூரில் 100 டன் பருத்தி
₹72.67 லட்சத்திற்கு ஏலம்மேட்டூர், பிப்.25:கொளத்தூரில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டையூர், கோவிந்தபாடி, செட்டிபட்டி, கண்ணாமூச்சி, நீதிபுரம், தண்டா, தார்காடு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் நல்லூர், செங்கப்பாடி, ஆலம்பாடி பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தி விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் பருத்தியை வாங்கி செல்வார்கள். நேற்று வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 100 டன் பிடி ரக பருத்தி விற்பனைக்கு வந்தது. இந்த வாரம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ பருத்தி ₹71 முதல் ₹73 வரை ஏலம் போனது. 2483 மூட்டைகளில் இருந்த 100 டன் பருத்தி ₹72,67,177க்கு ஏலம் போனது.

Tags : Salem Police ,Commissioner ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...