×

கொளத்தூரில் பரவும் அம்மை நோய் தாக்கம்

மேட்டூர், பிப்.25:தமிழகத்தில் கோடை காலம் துவங்கும் முன்பாகவே, பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இரவில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கொளத்தூர் ஒன்றியத்தில் சளி, காய்ச்சல் மற்றும் அம்மை நோய் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக 6 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்படுகின்றனர். பாலவாடி, காவேரிபுரம், நாயம்பாடி, சத்யா நகர் மற்றும் கோவிந்தபாடி பகுதிகளில், பரவலாக அம்மை நோய் தாக்கம் காணப்படுகிறது.

கடந்த 2 வாரங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேட்டுகாவேரிபுரத்தில் மட்டும், 15 குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : outbreak ,Kolathur ,
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...