கும்பாபிஷேக பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை

நாமக்கல், பிப்.25: புதுச்சத்திரம் அருகே நவணி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த செல்வவிநாயகர் கோயில் தர்மகர்த்தா ராஜா மற்றும் ஊர்பொதுமக்கள், நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்து, எஸ்பி கலைசெல்வனிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்வவிநாயகர், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறேன். கோயில் சிதிலம் அடைந்து இருந்ததால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, ஊர்பொதுமக்கள் அனைவரும், கும்பாபிஷேக பணிகளை செய்து வருகிறோம்.

மார்ச் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தனிநபர் ஒருவர் சிலரின் தூண்டுதலின் பேரில், கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் புகார்களை கொடுத்து, கும்பாபிஷேக பணிகளை தடுக்க முயற்சி செய்து வருகிறார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: