×

புதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க யூட்டேர்ன், தடுப்புகள் அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை,பிப்.25: காரைக்குடி-திருச்சி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் யூட்டேர்ன், வெள்ளனூர் முக்கம் பகுதியில் விபத்துக்களை தடுக்க தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-காரைக்குடி தேசிய நெடுங்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிக்கும் முன்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கீரனூர் அருகே உள்ள களமாவூர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்து முடிந்து தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் நல்லூர் பகுதியில் டோல் கட்டனம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை கருவேபிலான் கேட் பகுதியில் புதுக்கோட்டை நகர் பகுதியில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகள், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கருவேபிலான் கேட் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கும்போது அந்த யூட்டேர்ன் அமைக்காமல் விட்டு விட்டனர். இது குறித்து அப்போது அரசு தரப்பிடம் அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஒரு சிறிய சர்வீஸ் ரோட்டில் இரு புறங்களிலும் வாகனங்கள் வருகின்றது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறனர். குறிப்பாக தற்போது உள்ள சர்வீஸ் ரோட்டில் திருச்சியில் இருந்து வரும் வாகனங்களை மட்டுமே அனுதிக்க வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து வெளியேறும் பேருந்துகள் ரயில்வே கேட்டை தாண்டியவுடன் நெடுஞ்சாலையில் செல்லும் வகையில் யூட்டேர்ன் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் இது விபத்துகள் ஏற்படுவதை தவிர்கலாம். இதுபோல் முத்துடையாண்டிபட்டி அருகே உள்ள வெள்ளனூர் முக்கம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துகளை தடுக்க இரண்டு புறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும். தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் இரண்டு புறமும் வாகனங்கள் கட்டுப்பாடுகள் இன்றி வந்து செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. பல நேரங்களில் பெரிய அளிவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது.

இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்கிய போதே இந்த இடத்தில் யூட்டேர்ன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அப்போது அதிகாரிகள் எங்களது கோரிக்கையை செவி கொடுத்து கேட்கவில்லை. இதனால் இந்த சிறிய சர்வீஸ் சாலையில் இரு புறமும் அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் தற்போது விபத்துகள் அடிக்கடி நடக்கின்றது. இதனால் உயிர் சேதம் ஏற்படுகிறது. யூட்டேர்ன் அமைத்திருந்தால் புதுக்கோட்டையில் இருந்து வரும் பேருந்து அந்த சர்வீஸ் ரோட்டில் கண்டிப்பாக வந்திருக்காது. விபத்துகளும் ஏற்பட்டிருக்காது. ஒரு விபத்து ஏற்பட்டால் மருத்துவரை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்கு லட்ச கணக்கில் விரையமாகின்றது. இதனை தவிற்க சாலையில் அமைக்கும்போது தொலைநோக்குபார்வையுடன் அந்த பகுதியில் உள்ளவர்ளின் கருத்துகளை கேட்டுகொண்டு அமைத்திருந்தால் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும். இதனால் பல்வேறு விபத்துகளை ஏற்படும் கருவேபிலான் கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விரைந்து தகந்த நடவடிக்கை எடுத்து யூட்டேர்ன் அமைக்க வேண்டும். இதேபோல் வெள்ளனூர் முக்கத்தில் இரண்டு புறமும் வேகமாக வாகனங்கள் வருகிறது. இதனை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் நடடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pudukottai district ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...