அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.25:பொ. மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி பேரணியை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தின் போது 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எழுத, படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்தென்றல், ஆசிரியர் பயிற்றுநர் செண்பகவல்லி சேகர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: