அரியலூரில் டிடிவி திருமண மஹால்

அரியலூர்: அரியலூர் கல்லங்குறிச்சி சாலை அரசு பேருந்து டெப்போ அருகில் T.D.V திருமண மஹால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. திருமண மஹாலை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா திறந்து வைத்தார். முன்னதாக திருமண மஹாலில் அதன் உரிமையாளரான அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் தனவேல் - பச்சையம்மாள் செல்வவினாயகர் ஆலயத்திற்கு இரண்டு கால யாகத்துடன் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்சியில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு தலைமையில், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா ,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட T.D.V திருமண மஹாலை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். விழாவில் மாவட்ட விவசாய அணி துணை.அமைப்பாளர் இராமதாஸ் மற்றும் ஒன்றியக்குழுஉறுப்பினர்,இராவுத்தன்பட்டி ராணி மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை முத்தமிழ், மருமகன்கள் - மகள்கள் கிருஷ்ணகுமார்- பவளக்கொடி கிருஷ்ணகுமார், ராம்பிரசாத் - திலகவதி ராம்பிரசாத் மேலும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு துறையை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: