போதை கலச்சாரத்தில் இருந்து விடுவிக்க கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: விருதுநகரில் துவக்கம்

விருதுநகர், பிப். 25:  விருதுநகர் தேசபந்து மைதானத்தில தமிழக இளைஞர்கள், மாணவர்களை போதை கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாய வாலிபர் சங்க  நகர செயலாளர் தீபக்குமார் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியராஜ், பொறியாளர் ஊர்காவலன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கையெழுத்து இயக்கத்தில், முதல் கையெழுத்தை நகர்மன்ற தலைவர் மாதவன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

மேலும் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும். போதை பழக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்துகளை பொதுமக்களிடம் பெறும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் ஜெயபாரத், சிஐடியு வேலுச்சாமி, மநீம மாவட்ட செயலாளர் காளிதஸ், சிபிஎம் நகர செயலாளர் முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

Related Stories: