×

கண்டமனூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

வருசநாடு, பிப். 25: கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சக்தி தலைமையில், முதுகலை ஆசிரியர் ராமசாமி முன்னிலையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பினையும், அதன் செயல்பாட்டையும் எடுத்துரைத்து ஒருங்கிணைத்து மாணவர்களை திறன்பட பணியாற்றவும், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் சமூக பொறுப்புகளையும் எடுத்துரைத்து மாணவர்களை தயார்படுத்தப்பட்டனர்.

பின்பு இந்நிகழ்வில் மாணவர்கள் உற்சாகத்தோடும் நெகிழ்ச்சியோடும் கலந்து கொண்டு தாய் நாட்டின் மீது அக்கறை கொண்டு நமது கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து சுகாதாரத்தை பேணி காக்க உறுதிமொழி ஏற்றனர். இவர்களின் செயல் வருங்கால சந்ததிகளுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு தன் கிராமத்தை நாமே பேணிக் காக்க வேண்டும். சுகாதாரமுள்ள ஒரு கிராமமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியை உற்சாகத்தோடு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kandamanur ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு