×

தொழில்நுட்ப பயிற்சி பட்டறை முகாம்

போடி, பிப். 25: போடி முந்தல் சாலையில் உள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டு தொலை நிறுவனம் சிபிஏ கல்லூரி சார்பில் மாநில அளவிலான தொழில் பயிற்சி பட்டறை முகாம் நடத்தப்பட்டது. அறிவுசார் முகாம் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கல்லூரி தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், உபதலைவர் ராமநாதன் ,செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து பேசினர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் உறுப்பினர் சீனிவாசன் கலந்து கொண்டு பே காப்புரிமம் திட்டமிடல் மைய இணை ஆணையாளர் ராஜா அறிவுசார் சொத்துரிமை அறிமுகம் எனும் தலைப்பிலும், புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம் குறித்து உஷா ராஜநந்தினியும், பதிப்புரிமம் அறிவுத்திருட்டு அரசின் நடவடிக்கைகளும், வசதிகளும் என்ற தலைப்பில் விஞ்ஞானி கோமதி, பத்மா, திலகா பேசினர். சினார்.
இதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில், தர மதிப்பீட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், துணை முதல்வர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Training Workshop ,
× RELATED சமயபுரம், எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை