திருவாடானை அருகே ரூஆனிமுத்து கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருவாடானை, பிப். 25: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பகுதியில் பழமையான அழகிய நாயகி அம்மன்,  ரூஆனிமுத்து கருப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு திருப்பணிகள் மேற்கொண்ட பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின் பூஜையில் இருந்த புனித நீர் உதவியுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், முழங்க கோயில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதன்பிறகு அழகியநாயகி அம்மன், ஆனிமுத்து கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் அஞ்சுகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: