திருச்சி ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.24: திருச்சி ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தியும், சி.சி.எல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதை கண்டித்தும், பெண் டிக்கெட் பரிசோதகர்களுக்கு முறையான ஓய்வறை இல்லாததை கண்டித்தும், கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்ட பணி முறை இன்றும் தொடர்வதை கண்டித்தும் திருச்சி ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டி.ஆர்.இ.யு கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். துணைப் பொது செயலாளர்கள் ராஜா, சரவணன், உதவி செயலாளர் சிவக்குமார் மற்றும் டிக்கெட் பரிசோதனை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், எங்கள் முறையான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: