மூலமங்கலம்-திருவாரூர் சாலையில் வேகத்தடை இல்லாததால் தொடர் விபத்து

நன்னிலம், பிப்.24: மூலமங்கலம்- திருவாரூர் சாலையில் வேகத்தடை இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அல்லது இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம், அடுத்துள்ள மூலமங்கலம், திருவாரூர் சாலையில், அமைந்துள்ள சட்டரஸ் அருகில், அமைந்துள்ள சாலை வளைவில், அடிக்கடி விபத்துக்கள் நேர்ந்து வருகிறது. இந்த சாலை, ஆற்றின்கரையில் அமைந்துள்ளதால், அதிவேகமாக வரும் வாகனங்கள், காலை வளைவில், சில நேரங்களில் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

ஒரு சில நேரங்களில் விபத்தில் இறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்படுகிறது. மூலமங்கலத்தில் இருந்து ஆண்டிப்பந்தல் சாலை இருவழி சாலை ஆகும், சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றே ஒன்று முந்தும் பொழுது, ஆற்றின் பள்ளத்தில் வாகனங்கள் கவிழக்கூடிய நிலைகளும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், மூலமங்கலம் சட்ரஸ் அருகில் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். அல்லது ஆற்றின் ஓரமாக இரும்பு தடுப்பு அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, வாகன ஓட்டிகள் மற்றும் மூலமங்கலம் பகுதி மக்களிடம் இருந்து வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று, வேகத்தடை அல்லது இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: