புதுக்கோட்டையில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பேரணி

புதுக்கோட்டை, பிப்.24: புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை சார்பில் பிறருக்கு உதவ என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஆயிரம் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். பாண்டு வாத்தியம் முழங்க நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி அண்ணா சிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம், நகர்மன்ற வளாகத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே, கவிஞர் தங்கமூர்த்தி, அரசு வக்கீல் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: