×

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி திறமைகளை வெளிப்படுத்திய 500 வீரர், வீராங்கனைகள்

பெரம்பலூர், பிப்.24: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச் சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி முதல் வரும் 28ம்தேதி வரை நடைபெற்று வருகிறது. கல்லூரிகள் அளவிலான கால்பந்து மற்றும் நீச்சல் போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். கால்ப ந்து ஆண்கள் பிரிவில் மொத்தம் 19 அணிகள் கலந்து கொண்டதில் தந்தை ஹேன்ஸ் ரோவர் உடற்கல்வியி யல் கல்லூரி அணி முதல் பரிசு பெற்றது. ரோவர் வேளாண்மைக் கல்லூரிஅணி இரண்டாம் பரிசு பெற்றது. பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி அணி மூன்றாம் பரிசு பெற்றது.

நீச்சல் போட்டிகளில் 82 மாணவர்கள் கலந்து கொண்டனர். 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் ஜீவா நந்த் முதல் பரிசுபெற்றார். சிரஞ்சீவி இரண்டாம் பரிசு பெற்றார். திருமாவளவன் மூன்றாம் பரிசு பெற்றார். 200மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் விக்னேஷ் முதல் பரிசு, நவீன் இரண் டாம் பரிசு, கிருஷ்ணகுமார் மூன்றாம் பரிசு பெற்றனர். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் முதல் பரிசு திருமாவளவன், இரண்டாம் பரிசு அஸ்கர்அஹமது மூன்றாம் பரிசு, கிருஷ்ணக் குமார் பெற்றனர். 200மீட்டர் பட்டர் ஃபிளை போட்டியில் ஜெயராமன் முதல் பரிசும், நவீன் இரண்டாம் பரிசும், கிருஷ்ணகுமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். 200 மீட்டர் இண்டீஜூவல் மிட்லே போட்டியில் ஜீவாநந்த் முதல் பரிசும், ஜெயராமன் இர ண்டாம் பரிசு, திருமாவள வன், மூன்றாம் பரிசும் பரிசும் பெற்றனர். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தலைமையில் பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை முன்னின்று நடத்தினர். போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அளவில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : CM Cup ,
× RELATED முதல்வர் கோப்பை விளையாட்டு தொடர்...