×

முதன் முறையாக சர்ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக்கல்லூரி துவக்கம்

நாகப்பட்டினம்,பிப்.24: நாகப்பட்டினம் பாப்பாகோவில் சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் சர்ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலேயே முதன் முறையாகவும், தமிழ்நாட்டில் 12வது சித்த மருத்துவக்கல்லூரியாகவும் துவங்கப்படுகின்றது. இக்கல்லூரியில் இளநிலை சித்த மருத்துவ படிப்பு (B.S.M.S) நடப்பு கல்வியாண்டிற்கே (2022-2023) துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற உள்ளது. சித்த மருத்துவபடிப்பில் சித்தர்கள்கூறிய 4448 நோய்களுக்கும் சிகிச்சை உள்ளது. மேலும் சித்த மருத்துப்படிப்பில் மட்டுமே மருத்துவர்களே மருந்து தயாரித்து கொடுப்பது, வர்ம சிகிச்சை முறை என நோயில்லா வாழ்வதற்கு பாரம்பரிய மருத்துவ முறையாக இப்படிப்பு உள்ளது. இப்படிப்பில் குழந்தை மருத்துவம், பொதுமருத்துவம், சூல்மகளிர் மருத்துவம் ஆகியவையும் அடங்கும். நீட்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

Tags : Sir ,Isaac Newton ,Siddha Medical College ,
× RELATED PT சார்: விமர்சனம்