×

(தி.மலை) ஆந்திர இளைஞர் 50,000 கி.மீ சைக்கிள் பயணம் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு வலியுறுத்தி

செய்யாறு, பிப். 24: செய்யாறு வழியாக ஆந்திர இளைஞர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து 50,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதுச்சேரி பாளையம், பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரி நரசிம்மலு மகன் குரம் பஞ்சாலா சைதன்யா(23). இவர் பிபார்ம் படித்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு நெல்லூர்-கன்னியாகுமரி 500 கி.மீ தூரத்தில் மே 16 முதல் ஜூன் 3 பயணம் மேற்கொண்டு மரம் வளர்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணம் செய்தாகவும், ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 25 நெல்லூர் - பாகிஸ்தான் பார்டர் 3,880 கிலோ மீட்டர் 7 ஸ்டேட், 70 நாட்களில் பயணம் மேற்கொண்டு ஆந்திர அரசின் யூத் ஐகான் விருது செப்16ல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது காஷ்மீர் கன்னியாகுமரி பயணம் 50,000 கிலோ மீட்டர் கடந்த டிசம்பர் 26ம் தேதி ஆந்திராவில் தொடங்கி 61 வது நாளாக நேற்று காலை கல்பாக்கத்தில் இருந்து செய்யாறு வந்துள்ளார். தினமும் 80லிருந்து 120 கிலோமீட்டர் பயணம் செய்யும் வகையில் பிரத்தியேகமான நவீன சைக்கிளை வாங்கி உபயோகித்து வருகிறார். கின்னஸ் சாதனை பதிவிற்காக எலக்ட்ரானிக் கையடக்க கருவி மூலம் தினமும் பயணம் செய்யும் தூரம் நேரம் காலம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து பயணம் செய்து வருகிறார். இவ்வாறு பயணம் செய்கையில் பலர் அவருடன் வந்து செல்பி எடுக்கின்றனர். பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்தும் பசுமை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : T.Malai ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...