×

விழுப்புரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 15 பேர் கொண்ட குழு ஆய்வு

விழுப்புரம், பிப். 24: விழுப்புரம் அருகே அன்புஜோதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்புஜோதி ஆசிரமத்தை துவங்கி நடத்திவந்தார். இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லா இந்த ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக எழுந்தபுகாரின்பேரில் கடந்த 10ம் தேதி கெடார் காவல்நிலைய போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 11க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனை தொடர்ந்து  ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேர் கெடார் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்டு குழுவினர் ஆய்வு செய்தனர். குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Anbujothi ,Vilappuram ,CPCID Guaranam ,
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது