அம்மா பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

கரூர், பிப். 23: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பகுதியில் அம்மா பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த ஆட்சியல் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், சில பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. சில பூங்காக்கள் செயல்பாடின்றி உள்ளது.இதே போல், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் குறிப்பாக, கரூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், இதுபோன்ற பூங்காக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், காலை மற்றும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி பூங்காவை சீரமைத்து இந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: