வருகிற 25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத்தேர்வு நெல்லை மாவட்டத்தில் 5070 பேர் எழுதுகின்றனர் 30 தேர்வு மையங்கள் ஏற்பாடு

நெல்லை, பிப்.23: நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- 2 (குரூப் 2) பதவிக்கான  முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 25ம் தேதி நடக்கிறது. 5 ஆயிரத்து 70 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு பிப்.23ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், ெதாழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், வருவாய் துறையில் உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 413 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இதற்கான முதல் கட்ட தேர்வு கடந்த மே 21ம் தேதி நடந்தது. முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 25ம் தேதி பிரதான தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- பதவிக்கான  முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 25ம் தேதி காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் நடக்கிறது. இந்தத் தேர்வு நெல்லை மாவட்டத்தில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தாலுகாக்களில் 24 அமைவிடங்களில் 30 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த போட்டித் தேர்வை 5 ஆயிரத்து 70 தேர்வர்கள் எழுதுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சீதபற்பநல்லூர்ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, பாளை. செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, பொதிகை நகர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளை.  ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, பாளை. டக்கரம்மாள்புரம் டிடிடிஏ ஜெயராஜ் அன்னபாக்கியம்  மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்பட்டி கேஆர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாளை. ராம்நகர் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரஹ்மத்நகர் மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளை. ரோஸ்மேரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பாளை. சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாளை. ஹைகிரவுண்ட் அப்துர் ரஹ்மான்  மேல்நிலைப் பள்ளி, முருகன்குறிச்சி கதீட்ரல்  மேல் நிலைப்பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, பாளை. சி.எஸ்,ஐ  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளை. பிளாரன்ஸ் சுவைன்சன்  காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி, பாளை. மேரி சார்ஜெண்ட் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பாளை. ஒயாசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேட்டை காமராஜர் முனிசிபல்  மேல்நிலைப்பள்ளி, அம்பை. மெயின் ரோடு எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி, நெல்லை சாப்டர்  மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெல்லை பேட்டை மதிதா இந்துக்கல்லூரி ஆகிய இடங்களில் நடக்கிறது.  

தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை தாசில்தார் நிலையில் 10  சுற்றுக் குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்யும் பொருட்டு 31 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வினை கண்காணிக்கும்  பொருட்டு 30 ஆய்வு அலுவலர்களும், தேர்வு நாளன்று தடை படாத மின்சாரம் வழங்கவும், தேர்வு மையத்திற்கு பஸ்களை கூடுதலாக இயக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் கல்வி நிலையத்திற்கு காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யவும், தேர்வு மையத்தின் அருகில் நிபுணத்துவம்  பெற்ற மருத்துவ குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகளுடன்  தயார்  நிலையில் இருக்கவும்  சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை  கண்டறிந்து முன்கூட்டியே  தேர்வு எழுத வர வேண்டும். தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: