நெல்லை, பிப். 23: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (பிப்.21), ராமநாதபுரம், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜாய்(34) என்பவர், இலங்கைக்கு அனுப்பி வைக்க சொல்லி மனு அளிக்க வந்தபோது, ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பணியிலிருந்த ஏட்டு சண்முகவேலை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் கண்ணாடியால் தாக்கியதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஏட்டு சண்முகவேல் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பாளை எஸ்ஐ சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் அந்த இலங்கை வாலிபரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் இலங்கை வாலிபர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.