கமுதி அருகே 1200 கிலோ ரேஷன் அரிசி வேன் பறிமுதல்: டிரைவர் கைது

கமுதி, பிப். 23: கமுதி அருகே சரக்கு வேனில் கடத்திச்சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார். கமுதி அருகே கிளாமரத்துபட்டி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ்.ஐ சிவஞான பாண்டியன் தலைமையில், தலைமைக் காவலர்கள் குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை செல்ல முயன்ற ஒரு மினி சரக்க வேனை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 40 கிலோ எடையுள்ள 30 மூட்டைகள் என்ற எண்ணிக்கையில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனை ஓட்டிவந்த மதுரை ஜெ.ஜெ நகரை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் (46) என்பவரை போலீசார் ைகது செய்தனர். கடத்தப்பட்ட அரிசி மூட்ைடகள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின் ரேஷன் அரிசியை ராமநாதபுரம் நுகர் பொருள் வாணிப கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதில் ரேஷன் அரிசியை வாடகை வேனில் கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: