மதுரை, பிப்.23: எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மண்டல கூட்டம், மதுரையில் நடந்தது. மண்டல தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். கூட்டத்தில், மதுரையில் வரும் பிப்.26ம் தேதி நடைபெற இருக்கின்ற எஸ்டிபிஐ. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு, தேசிய தலைவர் எம்.கே.பைஜீ வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்காக போடியில் இருந்து சென்னை வரை தினசரி ரயில் துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்டத்தலைவர் பிலால்தீன் நன்றி கூறினார்.
