×

தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் சாலை மேடாக உள்ளது. அடுத்தபடம்: தேனி புதிய பஸ் நிலைய பகுதியில் மேடு கரைக்கப்பட்ட பகுதி. தேனி மாவட்டத்தில் முதல் அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாணவர்கள் உற்சாகமுடன் பங்கேற்பு

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் வருகிற 24ம் தேதி வரை நடக்க உள்ளது.

 தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கடந்த 8ம் தேதி தொடங்கிய போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட குழு போட்டிகளான வாலிபால், பேஸ்கட் பால், கிரிக்கெட், ஹாக்கி, கபடி, கால்பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று பள்ளி மாணவர்களுக்கிடையேயான தடகள போட்டிகளான 100 மீ, 200 மீ, 1500 மீ, 3 ஆயிரம் மீ, 110 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 834 பேர் கலந்து கொண்டனர். இன்று (22ம்தேதி) பள்ளி மாணவியர்களுக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளது. நாளை (பிப். 23) கல்லூரி மாணவர்களுக்கும், நாளை மறுதினம் கல்லூரி மாணவியர்களுக்குமான தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Tags : Theni New Bus Station ,Periyakulam ,First Minister Cup ,Theni ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்