திருத்தணியில் உடல்நலக் குறைவால் திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

திருத்தணி, பிப். 22: திருத்தணியில் உடல்நலக் குறைவால் கவுன்சிலர் இறந்தார். திருத்தணி அமுதாவரம் பகுதியில் வசிப்பவர் நந்தா என்ற நந்தகுமார் (30).  திருத்தணி நகராட்சியின் 9வது வார்டு திமுக கவுன்சிலர். திருமணமாகவில்லை. நந்தக்குமார் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிக்கு எம்.சான்ட், ஜல்லி விற்பனை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருத்தணியில் சிகிச்சைபெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்சந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி ஆகியோர் நந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். நந்தாவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

Related Stories: