×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, பிப். 22:  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊத்துக்கோட்டையில் பிப்ரவரி 17 முதல் 23ம் தேதிவரை தேசிய காசநோய் எதிர்ப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில்  விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி முரளி தலைமை தாங்கினார்.  பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் சுலோச்சனா, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் யுவராஜ், பிரசாத், அன்புச்செல்வி, தொழுநோய் ஒழிப்பு மேற்பார்வையாளர் மனோகரன், பாராமெடிக்கல் கல்வி நலசங்கத் தலைவர் கவுஸ் பாஷா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். முன்னதாக எச்ஐவி நம்பிக்கை மைய ஆலோசகர் ரவி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சிதலைவர் அப்துல் ரஷீத், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து அரசு பெண்கள் பள்ளி மாணவிகளின் பேரணியை தொடக்கி வைத்தனர். இந்த பேரணி திருவள்ளூர் சாலை, நேரு பஜார், நேரு சாலை உள்ளிட முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது.  இதில் வழிநெடுகிலும் காசநோய் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Uthukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...