×

கட்சி தாவ கடன் கேட்ட கதர் கட்சியை பார்த்து தெறித்து ஓடிய இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘யானை இளைத்து போனால் எறும்புக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க… அது எங்க கட்சிக்கு சரியாக பொருந்தும் போல இருக்கு என்று இலை தரப்பில் இருந்து பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறதாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சி கூட்டணியில் தாமரை கட்சி, அதிக சீட்டு கேட்டு முரண்டுபிடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த நேரத்தில் கூட்டணியில் இருக்கிற மாம்பழ கட்சியின் தலைவரும் புதுசா ஒரு குண்டை தூக்கி போட்டிருக்காராம். தமிழக விவிஐபியின் சொந்த மாவட்டத்தில் பிரஸ்மீட் நடத்தியவரிடம் தாமரை கட்சி 60 சீட் கேட்பது பற்றி கேள்வி கேட்டாங்களாம். அதற்கு மாம்பழ தலைவரு, தமிழ்நாட்டிலேயே நாங்கதான் 3வது பெரிய கட்சி. 2016 தேர்தலில் கூட, இதை நாங்க நிரூபிச்சிருக்கோம். எங்க கட்சிக்கு என்ன வலிமை இருக்குது, அந்த கட்சிக்கு என்ன வலிமை இருக்குதுன்னு இலை கட்சிக்கு நல்லாவே தெரியும். அந்த அடிப்படையில் சீட்டு ஒதுக்குவாங்க. அப்புறம் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன். இப்போ நாங்க இலை கூட்டணியிலதான் இருக்கோம். இருந்தாலும் நாங்க கூட்டணியில் தொடர்வது என்பது இடஒதுக்கீடு விவகாரத்தில் தான் அடங்கி இருக்குன்னு குண்டு போட்டாராம். எத்தனை சீட்டு என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்வோம் என்றாராம்… இதை கேட்ட இலை கட்சியின் பிரமுகர்கள்… தேர்தல் வந்ததால எல்லோரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டம்னு சொல்லியே மிரட்டுறாங்களேப்பா…’’ என்று புலம்புகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை நிர்வாகியை கதர் கட்சிக்காரர் கதறக்கதற ஓட வைத்த விஷயத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இலையின் முக்கிய புள்ளிகள், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களை அணுகி, மூளைச்சலவை செய்து, தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ைசலன்ட் ஆக இறங்கியுள்ளனர். சமீபத்தில் கோவை கதர் கட்சி நிர்வாகி ஒருவரை, ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் அணுகியுள்ளார். அப்போது, ‘நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால், உங்களுக்கு தேவையான பதவி மற்றும் சலுகைகள் பெற்றுத் தருகிறோம்’ என ஆசைவார்த்தை கூறியுள்ளார். ஆனால், அந்த கதர் கட்சி நிர்வாகி அதற்கு மசியவில்லையாம். சரி பரவாயில்லை… எனக்கூறிவிட்டு சென்ற அந்த முக்கிய பிரமுகர், ஒரு சில தினங்கள் கழித்து மீண்டும் கதர் கட்சி நிர்வாகியை நேரில் சந்தித்து, இலை கட்சியில் இணையும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது, அந்த கதர் நிர்வாகி, ‘நான், இங்குள்ள முக்கியமான பத்து நபர்களிடம், தலா பத்து லட்சம் வீதம், மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். அந்த கடனை அடைத்துவிட்டு உங்கள் கட்சிக்கு வந்துவிடுகிறேன். ரொம்ப அவசரம் என்றால், அந்த கடனை நீங்களே அடைத்துவிடுங்கள், உடனே உங்கள் கட்சிக்கு வந்துவிடுகிறேன்’ என சொன்னாராம். அது உண்மையா… இல்லை நம்மை துரத்திவிடும் தந்திரமா என்பது தெரியாமல் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் மீண்டும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச்சில் வருவதாக மாவட்ட உயரதிகாரி சொன்னது குமரியில் பரபரப்பாகி வருதாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலும், கன்னியாகுமரிக்கு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து எந்த நேரத்திலும் அறிவிக்கலாமாம். இதற்காக தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களும் ஒரே நேரத்தில் இரண்டு ஓட்டுக்களை போட ரெடியாக இருக்கிறார்களாம். இந்தநிலையில் வாக்காளர் இறுதிபட்டியல் வெளியீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்ததாம். அதில் பேசிய கலெக்டர் ‘தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் மாதம் முதல் வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது’ என்று கூறிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்… எனவே நம்ம தேர்தல் பணி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று தாமரை தரப்பினர் பரபரப்பாக பேசிக் கொண்டார்களாம். இப்படி, தேர்தல் தேதி தொடர்பாக வெளிப்படையாக அவர் அறிவித்தது கட்சியினரிடையே ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியை அளித்துள்ளதாம். இதன் மூலம் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதும், கூடவே கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு முதலில் தனியாக தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இல்லை என்பதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்று அரசியல் கட்சியினர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்ந்த கல்வித் துறையை ேசர்ந்தவர்கள் கிலியில் இருக்காங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கல்லூரி கல்வித் துறையில் நடக்கும் தகிடு தத்தங்களை தொடர்ந்து வாட்ஸ் அப் குழுக்களில் ஊழியர்கள், அலுவலர்கள் பதிவிட்டு வந்தார்களாம். இந்தக் குறைகள் அப்படியே பார்வர்டு ஆகி வெளி உலகத்திற்கு பகிரப்பட்டதாம். இது இயக்குநரின் காதுகளை எட்ட அவரோ, அரசு கல்லூரிகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியம் பணியாளர்கள் தங்களது குறைபாடுகள் மற்றும் பணிபுரியும் கல்லூரி வளாகம், அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவேற்றம் ெசய்யக்கூடாது. அவ்வாறு கடைபிடிக்காதவார்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கல்லூரி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்… போலீசை காட்டி மிரட்டுவது சரியல்ல என்று ஊழியர்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post கட்சி தாவ கடன் கேட்ட கதர் கட்சியை பார்த்து தெறித்து ஓடிய இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Ili ,Khadar ,wiki ,Yananda ,
× RELATED பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே...