×

கோபி  வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வாசிப்புத்திறன், எழுத்துத்திறன் மேம்படுத்துதல் நிகழ்ச்சி

கோபி,பிப்.22: கோபி  வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் மத்திய நூலகம், ரீடர்ஸ் கிளப் மற்றும் என்.டி.எல்.ஐ கிளப் ஆகியவையும், சாலிஸ் ஈரோடு சேப்டர் சார்பில் ‘வாசிப்புத்திறன் மற்றும் எழுத்துத்திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. கல்லூரி முதல்வர்  ப.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வாசிப்புத்திறன் மற்றும் எழுதும் திறன்’ என்ற தலைப்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர்  எம். உமை அரசி பேசினார்.

தொடர்ந்து  ‘வாசிப்பு பழக்கத்தால் கிடைத்த வெற்றிக்கதைகள்’ என்ற தலைப்பில் கோவை கேபிஆர் கலை அறிவியல், ஆராய்ச்சி கல்லூரி  நூலகரும், சாலிஸ், கோவை சேப்டரின் இணைச்செயலாளருமான எஸ்.பரமசிவம் பேசினார்.  அப்போது இந்தியத் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரும் தங்களின் வாசிப்பு பழக்கத்தால் தங்களின் ஆளுமையை வளர்த்துக்கொண்ட விதம் குறித்தும் அதன்மூலம் கிடைத்த  வெற்றிகள் குறித்து விளக்கினார்.
முன்னதாக கல்லூரியின் நூலகர் அசோக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் எஸ்.பிரகாசம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  வேதியியல் துறை பேராசிரியர் ந. சுகுமார் நன்றி கூறினார்.

Tags : Gobi ,Venkateswara College of Engineering ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு