×

சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து நேற்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் உதவிகள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 150 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 24 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் நலவாரிய பதிவு செய்து முகாமிலே வழங்கப்பட்டது.
மேலும் தனித்துவ அடையாள அட்டை 15 நபர்களுக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது. 33 நபர்களுக்கு ரயில்வே மற்றும் 34 நபர்களுக்கு பேருந்து பயண சலுகைக்கான மருத்துவ சான்று வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் சுப்புராஜ், திலகவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா,வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயந்தி, வள மைய சிறப்பு பயிற்றுநர் மகேஸ்வரன், இயன்முறை மருத்துவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Tags : Special Medical Camp ,
× RELATED பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா...