×

தவக்காலம் இன்று முதல் துவக்கம் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் அனுஷ்டிப்பு

மதுரை: இன்று முதல் துவங்கும் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இந்நாளை சாம்பல் புதனாக அனுஷ்டிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம், இன்று (புதன்கிழமை) சாம்பல் புதனுடன் தொடங்குகிறது. இதையடுத்து ‘சாம்பல் புதனை’ கிறிஸ்துவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தேவாலயங்களில் பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெறும். தவக்காலம் இன்று துவங்கி, 40 நாள்களுக்கு கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாட்களாக கருதுவர். இத்தவக்காலத்தில் இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலமாக இருக்கும். இந்நாட்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாக தங்களை ஐக்கியப்படுத்தி கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும்.

தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தவக்காலம் உதவியாக இருக்கும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 6ம் தேதி புனித வியாழன் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனிதவெள்ளி வருகிறது. அன்றிலிருந்து 3வது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9ம் தேதி கிறிஸ்துவர்கள் கொண்டாட உள்ளனர்.

Tags : Lent ,Christians ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி