×

குஜிலியம்பாறையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் மாற்றுத்திறனுடைய மூளைவளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிப்பு, காது கேளாதோர், வாய்பேச இயலாதோர், கண்பார்வை குறைபாடு உள்ளிட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எலும்பு முறிவு மருத்துவர் லோகநாதன், குழந்தைகள் நல மருத்துவர் ஆனந்தநாராயணன், மன நல மருத்துவர் வித்யா, கண் மருத்துவர் ரவி, காது, மூக்கு தொண்டை மருத்துவர் முகமதுரியாஸ் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் 18 வயதிற்குட்பட்டோர் 97 பேர், 18 வயதிற்கு மேற்பட்டோர் 42 பேர் என மொத்தம் 139 பேர் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ காப்பீடு அட்டை 42 பேர், பஸ் பாஸ் 35 பேர், ரயில் பாஸ் 37 பேர் உதவி உபகரணங்கள் 11 பேர் என 125 பேருக்கு வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் அமுதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Kujiliamparai ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு