×

தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்: தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருவாரூரில் நேற்று கலெக்டர் சாரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவாரூர் பழைய ரயில் நிலையத்திலிருந்து தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு நேற்று கொடியசைத்து துவக்கி பேசியதாவது, தமிழ் வளர்ச்சித் துறையின் 2022ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவு கூறும் வகையில், 7 நாள்கள் ஆட்சிமொழிச் சட்டவாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு ஏற்ப இவ்வாண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவாரம் இன்று (நேற்று 21ந் தேதி) முதல் வரும் 28ந் தேதி வரை ஒரு வாரகாலம் கொண்டாடப்படவுள்ளது.
மேலும், அரசு அலுவலங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினை நினைவு கூறும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.


நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கனகலட்சுமி, அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற புலவர் சண்முகவடிவேல், புலவர் விவேகானந்தன், தொழிலதிபர்கள் டாக்டர் செந்தில், கனகராஜன் மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் துவக்கி வைத்தார் சிவராத்திரியை முன்னிட்டு  ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தெப்ப உற்சவம்

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...