×

30 விற்பனையாளர்களுக்கு அபராதம்

சேலம்: ஆத்தூர் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குறைபாடு கண்டறியப்பட்டதால், 30 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பணையில்  கடந்த 18ம் தேதி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேஷன் அரிசி 40டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து  ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ஆத்தூர் பகுதியில் உள்ள  ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைபதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள்  கொண்ட குழுவினர் ,நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.  இதில், 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

இதைதொடர்ந்து, அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆத்தூரில் நடந்த சோதனையில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்,’’ என்றனர்.   

Tags :
× RELATED மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது