×

முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் ெதாடங்கியது

சேலம்: சேலத்தில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகளில், 1,500 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள 41,481 நபர்கள் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நேற்று, பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகள் தொடங்கியது. சேலம் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் போட்டிகளை தொடங்கி ைவத்தார். அப்போது, செயலாளர் சண்முகவேல், துணை தலைவர்கள் ராஜாராம், லீலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1,500மீ, தடைதாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதேபோல் கால்பந்து ேபாட்டிகள் சோனா கல்லூரியிலும், கபடி போட்டிகள் விநாயகா மிஷன் உடற்கல்வி கல்லூரியிலும், வளைகோல்பந்து மற்றும் சிலம்ப போட்டிகள் சிறுமலர் பள்ளியிலும் ேநற்று தொடங்கியது.

Tags : Chief Minister's Cup ,
× RELATED மாநில விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி மாணவர்கள் சாதனை