×

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கேபிகே தங்கவேலு 6ம் ஆண்டு நினைவு நாள்

புதுக்கோட்டை, பிப்.22: திருவரங்குளம் ஒன்றிய நகர திமுக சார்பில் பாத்தம்பட்டியில் உள்ள இல்லத்தில் முன்னாள் ெதற்கு மாவட்ட செயலாளர் தங்கவேலு ஆறாவது நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பன் கழக தலைவர், ெதாழிலதிபர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கேபிகேடி தங்கமணி, ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கேபிகேடி வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூர் திமுக செயலாளர் பழனிவேல், கீரமங்கலம் பேரூர் நகர செயலாளர் சிவகுமார், எஸ்எம்குமரேசன்,மகிமைநாதன், கரும்பராகோட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசரவணன், செல்வம், பன்னீர் செல்வம், திருவரங்குளம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முகம்மது ரபீக் மற்றும் நிர்வாகிகள் கலந்து ெகாண்டு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கேபிகேடி சூர்யா செய்திருந்தார்.


பைக் மீது கார் மோதியதில் 2 பேர் படுகாயம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ஆரியூரை சேர்ந்தவர் செல்லையா (57). இவரும் அதே ஊரை சேர்ந்த வீரையா (45) என்பவரும், ஒரு மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக நார்த்தாமலை சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு சென்றபோது சித்தன்னவாசல் சமத்துவபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் அவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லையா மற்றும் வீரையா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மழையூர் முத்து மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாகறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்து பெற்ற  முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நேற்று நடைபெற்ற பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளங்கள் முழங்க பூக்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் கோயில் வளாகத்தில் பூக்கள் அனைத்தையும் குவியலாக வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கறம்பக்குடி மற்றும் மழையூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட குறுவளமையங்களில் பணியாற்றுகின்ற இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஏழாம் கட்டப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு நல்ல நாகு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ் பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொன்னமராவதி, ஆலவயல், நகரப்பட்டி, சடையம்பட்டி, காரையூர் உள்ளிட்ட அனைத்து குறுவள மையங்களில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஏழாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.


சுகாதார விழிப்புணர்வு முகாம் பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிராமத்தில் ஒட்டுமொத்த சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் பேசும்போது, பொதுமக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாமில் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் நோய் பரவும் விதம் தடுக்கும் முறைகள் சிகிச்சை முறைகள் காசநோய் மற்றும் தொழுநோய் குறித்து நலக்கல்வி வழங்கப்பட்டது.

Tags : District Secretary ,Kepike Thangavelu ,Dizhagam ,
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு