×

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம் பாட்டுத்திட்டத்தில் தொழில் துவங்க இணையதளத்தின் மூலம் எளிதாக விண்ணப்பித்து கடனுதவிகள் பெறலாம் - பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில்படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க, தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொ ழில் முனைவோர் மூலம் ஏற்படவும், பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொ ழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

(NEW ENTREPRENEUR CUM ENTERPRISE DEVELOPMENT SCHEME (NEEDS) இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியி னர் தொழில் முனைவோரு க்கு Earth Moving Equipments மற்றும் சுற்றுலா பயணி கள் வாடகை வாகனம் தொ ழில் செய்வதற்கும் மற்றும் இதர தொழில்கள் செய்வ தற்கும் 35 சதவீதம் அதிக பட்சமாக ரூ75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்து டன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடு தல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்ப டும். இத்திட்டத்தில் பயனடைய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொ ழில் முனைவோர் 21 வயது முதல் 45 வயதிற்குள் இரு க்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வே ண்டும்.

இத்திட்டத்தில் பய ன்பெற ஆர்வமுள்ள, பட்டி யலின மற்றும் பழங்குடி யின தொழில் முனைவோர் கள் www.msmetamilnadu.tn . gov.in என்ற இணையதளத் தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான் றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சி யரால் வழங்கப்பட்ட இருப் பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதி வேற்றம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 89255 33976, 89255 33977 என்ற தொலைபேசியிலோ அல் து பொது மேலாளர், மாவ ட்ட தொழில் மையம், மாவ ட்ட ஆட்சித் தலைவர் அலு வலகம் அருகில், பெரம்ப லுார் 621 212 அலுவலகத்தை நேரிலோ அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,District Entrepreneurs ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்