×

இன்று நடக்கிறது 2 மூன்று சக்கர ஆட்டோ ஏலம்

அரவக்குறிச்சி: பள்ளபட்டி நகராட்சிக்கு சொந்தமான 2 மூன்று சக்கர ஆட்டோக்கள் கழிவு செய்யப்பட்ட நிலையில் ஏலம் விடப்படுகின்றது. விருப்பமுள்ள யாவரும் இதில் கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளபட்டி நகராட்சிக்கு சொந்தமான 2 மூன்று சக்கர ஆட்டோக்கள் இரண்டு கழிவு செய்யப்பட்ட நிலையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள யாவரும் இதில் கலந்து கொள்ளலாம் . இன்று (22ம் தேதி) காலை 11 மணிக்கு பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பாக, மேலும் விபரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது