×

கரூர் மாவட்டத்தில் சாலை ஓரம் நின்று மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரூர்: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நின்று மது அருந்தும் நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அறிவுறுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. பெரும்பாலான கடைகளின் அருகே பார்கள் செயல்படுகிறது. சில கடைகளில் பார் வசதி இல்லாமல் உள்ளது. மாநகராட்சியை தாண்டி, புறநகர்ப்பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதுபோன்ற கடைகளுக்கு வரும் சில குடிமகன்கள், கூட்டாக சேர்ந்து கொண்டு, சரக்குகளை வாங்கி சாலையோரமே நின்று குடித்து விட்டு செல்கின்றனர். மேலும், குடித்து விட்டு, பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை சாலையோரமே தூக்கி வீசி எறிந்து விட்டும் செல்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையோரம், சாலையோரத்தில் உள்ள பாலக்கட்டைகள் போன்றவற்றை இரவு நேரத்தில் ஆக்ரமித்து, குடிமகன்கள் குடித்து கும்மாளமிடுவதால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாக நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த அந்தந்த காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, சாலை மற்றும் பாலக்கட்டைகளை ஆக்ரமித்து, குடிக்கும் நிகழ்வுகளை கண்காணித்து தேவையான அறிவுரைகளை வழங்கி தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தில் சம்பா சாகுபடி பணிகளை செய்ய விவசாயிகள் அறுவடையை முடித்துவிட்டு குறுவை நடவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்